கோழி இன்னும் முட்டை போடல… எக்ஸ்ட்ரா ஆம்ப்லேட் கேட்டு பந்தியில் அசிங்கப்பட்ட சூப்பர் ஸ்டார்!

Author: Shree
18 July 2023, 5:08 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடித்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரஜினிக்கும் சரி, நெல்சனுக்கும் சரி மிக முக்கியமான படமாகும். இருவருக்கும் தற்போது கட்டாயம் ஒரு வெற்றி தேவை என்பதால் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்து நம்பியிருக்கின்றனர்.

இப்படியான நேரத்தில் ரஜினி குறித்து பழைய சம்பவம் ஒன்றை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில், ரஜினி ஆரம்ப காலத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அப்போது AVM ப்ரோடுக்ஷன் கம்பெனியில் சாப்பிட்டு பரிமாறப்பட்டது.

அப்போது டாப் ஹீரோக்களுக்கு ஹைகிளாஸ் விருந்தது, சாதாரண நடிகர் நடிகைகளுக்கு அவர்களுக்கு ஏற்றவாறு ஒரு விருந்து என பகுதி பகுதியாக தகுதிக்கு ஏற்றவாறு விருந்து வழங்கப்பட்டது. அப்போது சாதாரண நடிகராக வளர்ந்துக்கொண்டிருக்கும் ரஜினி பந்தியில் இன்னொரு ஆம்லெட் கிடைக்குமா என கேட்டதற்கு? சாப்பாடு பரிமாறிய இளைஞன் ” கோழி இன்னும் முட்டை போடல” என நக்கல் அடித்துள்ளார்.

அப்போது ரஜினியின் அருகில் நடிகர் குமரிமுத்து உள்ளிட்டோர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்களாம். அந்த நேரத்தில் ஒரு ஆம்லெட் கேட்டு அசிங்கப்பட்ட ரஜினி தலைகுனிந்தபடி சாப்பிட்டு அங்கிருந்த்து சென்றார் என்று நடிகர் குமரிமுத்து கூறியதாக செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதை அறிந்த பலர் “இந்த மாதிரி பல விஷயங்களை பார்த்து தான் விஜய்காந்த் எல்லோருக்கும் நல்ல சாப்பாடு போட்டார். ” என அவரை நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?