தலைவா உன் முகத்தை பாக்கணும்- மாஸாக எழுந்து திடீர் தரிசனம் தந்த ரஜினிகாந்த்! வைரல் விடியோ

Author: Prasad
7 August 2025, 12:07 pm

இன்னும் 7 நாட்களில்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வெளியாக இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்திற்கான கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் காம்போவில் உருவாகியுள்ள திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்திற்கு பல மடங்கு எதிர்பார்ப்பு உள்ளது. 

Rajinikanth in flight addressing fans video viral on internet

வெளிநாடுகளில் “கூலி” திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில்  டிக்கெட்டுகள் மளமளவென விற்றுத் தீர்ந்து வருகின்றன. தமிழ்நாட்டில் விரைவில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு “கூலி” Fever அதிகரித்துள்ளது. 

விமானத்தின் திடீர் தரிசனம் தந்த ரஜினிகாந்த்

இந்த நிலையில் ரஜினிகாந்த் விமானத்தில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சீட்டில் இருந்து எழுந்து அவர்களுக்கு தரிசனம் தந்த விடியோ வைரல் ஆகி வருகிறது. அதாவது விமானத்தின் முன் வரிசையில் ரஜினிகாந்த் அமர்ந்திருக்க, “தலைவா, முகத்தை பார்க்கணும்” என பின் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு ரசிகர் வேண்டுகோள் விடுக்க, உடனே தனது சீட்டில் இருந்து எழுந்து ரசிகர்களுக்கு காட்சித் தந்தார் ரஜினிகாந்த். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!