மதுரை முருகன் மாநாட்டில் சூப்பர் ஸ்டார்? உறுதிப்படுத்திய ரஜினிகாந்த் தரப்பு?  

Author: Prasad
21 June 2025, 12:51 pm

மதுரை முருக பக்தர்கள் மாநாடு

நாளை (ஜுன் 22) மதுரையில் அமைந்துள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்துகொள்ள உள்ளார் என கூறப்படுகிறது. இந்த மாநாட்டிற்காக அறுபடை வீடுகளின் மாதிரி அமைப்பு போல அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அரசியல் ரீதியாக பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மதத்தை வைத்து பிளவு ஏற்படுத்தவே இந்த முருகன் மாநாடு என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள முருகன் மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளிவந்தன. 

rajinikanth not participated in madurai murugan devotees conference

உறுதிபடுத்திய ரஜினி தரப்பு?

இந்த நிலையில் ரஜினிகாந்த் முருகன் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து ரஜினிகாந்த் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது “மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் கலந்துகொள்கிறார் என்று உலா வரும் செய்தி பொய்யானது. தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஜினிகாந்த் முருகன் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது. 

  • the reason behind top actors are absent in king kong daughter marriage function ஓடி ஓடி பத்திரிக்கை வச்சி ஒருத்தர் கூட வரல? கிங் காங் வீட்டுத் திருமணத்தில் தலை காட்டாத நடிகர்கள்!