கலங்கடிச்சீட்டிங்க சசிகுமார்- டூரிஸ்ட் ஃபேமிலி பார்த்துவிட்டு இதயங்களை அள்ளி வீசிய சூப்பர் ஸ்டார்…
Author: Prasad17 May 2025, 12:35 pm
ரெட்ரோவை ஓவர் டேக் செய்த சசிகுமார்…
கடந்த மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு “ரெட்ரோ”, “டூரிஸ்ட் ஃபேமிலி” ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளிவந்தன. இதில் “ரெட்ரோ” திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தமிழ் சினிமாவின் சிறந்த ஃபீல் குட் திரைப்படம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.
மேலும் “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் சூர்யாவின் “ரெட்ரோ” திரைப்படத்தையும் தாண்டி வசூல் சாதனை புரிந்து வருவதாக திரையரங்கு உரிமையாளர்களே வெளிப்படையாக கூறுகின்றனர்.
இதயங்களை வீசிய சூப்பர் ஸ்டார்
“டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படத்தை பாராட்டியதாக தனது எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் சசிகுமார்.
“படம் சூப்பர் என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப்போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் என்று சொன்னால், சந்தோஷத்திற்கு சொல்லவா வேண்டும். அயோத்தி, நந்தன் படம் பார்த்து பாராட்டிய ரஜினி சார் ஹாட்ரிக் பரவசமாக டூரிஸ்ட் ஃபேமிலி படம் பார்த்து சூப்ப்ப்பர் சசிகுமார் என அழுத்திச் சொன்னார்.
தர்மதாஸாகவே வாழ்ந்திருக்கீங்க. சொல்ல வார்த்தைகளே இல்லை. அந்தளவுக்கு வாழ்ந்துட்டீங்க. பல சீன்களின் கலங்கடிச்சிட்டீங்க. சமீப காலமாக உங்களுடைய கதை தேர்வு வியக்க வைக்கிறது சசிகுமார் என ரஜினி சார் சொல்லச் சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மனதில் நிறுத்தி, அத்தனை பேரின் பங்களிப்பையும் வாழ்த்தி ரஜினி சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவுக்கு கிடைத்த பொக்கிஷ பட்டயம். தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டும் உங்களின் தங்கமான மனசுக்கு மிக்க நன்றி ரஜினி சார்” என்று ரஜினிகாந்த் பாராட்டியதை பகிர்ந்துகொண்டுள்ளார் சசிகுமார்.
#TouristFamily #SuperStar #Rajinikanth sirrr 😍🤗 pic.twitter.com/jzYvGe5XlR
— M.Sasikumar (@SasikumarDir) May 16, 2025