திருமணம் செய்வதாக கூறி நடிகையின் சொத்தை சுருட்டிய ரஜினியின் நண்பர் : அட இவரும் பிரபல நடிகராச்சே!!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2023, 4:06 pm

சினிமாவை பொறுத்தவரை காதல் என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. உடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுடன் காதலில் வீழ்ந்து கல்யாணம் வரை சென்ற கதைகளும் உண்டு. சில சமயங்களில் அந்த உறவு கல்யாணம் வரை செல்லாமல் முடிந்தும் உள்ளது.

இப்படிப்பபட்ட சூழ்நிலையில் 80ஸ் களில் இருந்து தற்போது வரை நடித்து வரும் குணச்சித்திர நடிகர் தான் சரத்பாபு. அழகான சாயல், வெள்ளை நிறம் என அப்போதே இவர் மீது நடிகைகளுக்கு பெரிய ஈர்ப்புண்டு.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த சரத்பாபு, முள்ளும் மலரும், அண்ணாமலை, வேலைக்காரன், முத்து என ரஜினியுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

1974ல் பட்டின பிரவேசம் படம் மூலம் தமிழில் அறிமுகமான அவர், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இவர் ஆரம்பத்தில் நடிகை ரமா பிரபாவை காதலித்தார். திருமணம் செய்யாமலேயே உறவில் இருந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் என்னை ஏமாற்றி என் சொத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு ஒடிவிட்டார் என நடிகை ரமா பிரபா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

இதை பற்றி பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்த சரத்பாபு, தனது சொந்த விவசாய நிலம் அனைத்தையும் விற்றும் இந்த நடிகைக்கே உமாபதி நகரில் சொந்த வீடு கட்டி கொடுத்தேன். அவரின் மற்ற வீடு லட்சக்கணக்கில் செலவு செய்து புதுப்பித்தேன். நான் அவருக்கு வாங்கி கொடுத்த வீட்டை தான் திருப்பி எடுத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?