கூலி ஒரு படமே கிடையாது? சூர்யா பட இயக்குனர் போட்ட டிவிட்? இவர் என்ன இப்படி சொல்றாரு!
Author: Prasad13 August 2025, 12:22 pm
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் காம்போ
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் காம்போவில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள பல தரப்பு ரசிகர்கள் “கூலி” திரைப்படத்தை பார்ப்பதற்காக வெறிகொண்டு காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது. டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உலகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் அனைத்து டிக்கெட்டுகளும் மளமளவென விற்றுத்தீர்ந்தது.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படமாக “கூலி” திகழ்ந்துள்ளது. இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஒருவர் பகிர்ந்துள்ள டிவிட் பலரின் கவனத்தை குவித்துள்ளது.
சூர்யா பட இயக்குனரின் டிவிட்
ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் மிகவும் வித்தியாசமான படைப்பாளியாக வலம் வந்தவர்தான் ராம் கோபால் வர்மா. இப்போதுள்ள பல இயக்குனர்களுக்கு அவர் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் இவர் “கூலி” திரைப்படத்தை குறித்து பகிர்ந்துள்ள டிவிட் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
COOLIE is not a MOVIE..It’s a MOVEMENT
— Ram Gopal Varma (@RGVzoomin) August 13, 2025
“கூலி ஒரு திரைப்படம் அல்ல, கூலி ஒரு இயக்கம்” என அதில் தெரிவித்துள்ளார். இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராம் கோபால் வர்மா சூர்யாவை வைத்து “இரத்த சரித்திரம்” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
