மீனா தான் வேணும் அடம்பிடித்த அரசியல் பிரமுகர்..! துளியும் மதிக்காத கண்ணழகி..!

Author: Vignesh
2 June 2023, 11:00 am
meena - updatenews360 3
Quick Share

ரஜினி, கமலுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் இருந்தாலும் ஒரு காலத்தில் இவர்களுக்கு போட்டியாக ஒரு நடிகர் இருந்துள்ளார் என்பதை அனைவராலும் நம்பமுடியாத உண்மை. அவருடைய போதாத காலம் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார் என்பது குறிப்பிடத்த்க்கது.

இல்லையென்றால் தற்போது ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் இடங்களில் கண்டிப்பாக அவரும் ஒரு நடிகர் இடம்பெற்றிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த காலகட்டத்தில் இவரைப் பார்த்து ரஜினி, கமல் போன்ற நடிகர்களே பயந்து நடுங்குவார்களாம். அந்த நடிகரின் படத்திற்கு போட்டியாக இவர்களது படம் வெளியிட்டால் கண்டிப்பாக தோல்வி நிச்சயம் தான்.

Kamal rajini updatenews360

அந்த அளவுக்கு அவரின் ரசிகர்களின் பேர் ஆதரவை நடிகர் பெற்று இருந்தார். அந்த நடிகர் வேறு யாரும் இல்லை ராமராஜன் தான். இவரது நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, காவல்காரன் போன்ற பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து பட்டிதொட்டி எங்கும் இவரது பாடல்கள் பட்டையை கிளப்பியது. ரஜினி, கமல் போன்ற நடிகர்களை ஒப்பிடும்போது இவரது படங்கள் தான் அந்த காலத்தில் அதிக ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Ramarajan nalini - updatenews360

இதுமட்டுமின்றி அப்போது நடிகர் ராமராஜனுக்கு தமிழ் சினிமாவில் அதிக மவுசு இருந்த நிலையில், அந்த காரணத்தினால் ஒரு துண்டு சீட்டில் ராமராஜன் இந்த இயக்குனர் படத்தில் நடிப்பதாக கால்ஷீட் தேதியை எழுதி கொடுத்து கையெழுத்து போட்டால் மட்டுமே போதுமாம். தயாரிப்பாளர்கள் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் போட்டு படத்தை எடுக்க தயாராக இருந்தார்களாம்.

Ramarajan nalini - updatenews360

அதேபோல் நடிகர் ராமராஜன் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் யாரிடம் பணம் கேட்டாலும் அவர்கள் கொடுக்கவும் தயாராக இருந்தார்களாம். ஏனென்றால் அந்த காலத்தில் ராமராஜனின் படங்கள் 100% உறுதி என சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களால் முழுமையாக நம்பப்பட்டது.

Ramarajan nalini - updatenews360

இதனிடையே, தனது மனைவி நளினியை விவாகரத்து பெற்று நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நடிகர் ராமராஜன் அதன் பின்பு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். பின்னர் ராமராஜன் இப்போது மீண்டும் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்து வருகிறார்.

துணை நடிகராக தன்னால் நடிக்க முடியாது என்று தெரிவித்து தற்போது 62 வயதிலும் சாமானியன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்தும் படம் இன்னும் வெளியாகவில்லை.

Ramarajan nalini - updatenews360

இதனிடையே, இந்த படம் வெளியாகாத நிலையில் புதுமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் உத்தமன் என்ற படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மீனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. முன்னதாக, ராமராஜன் மீனா தான் வேண்டும் என்று இயக்குனரிடம் அழுத்தம் கொடுத்து இருக்கிறார். ஆனால் நடிகை மீனாவோ இன்றுவரை சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.

meena - updatenews360 3

இதற்கு காரணம், தற்போது மீனாவுக்கு மார்க்கெட் இல்லை என்றாலும் அவருக்கென ஒரு பெயர் இருக்கிறது என்பதனாலும், தற்போது மலையாளத்தில் மீனா பெரிய நடிகரின் படத்தில் நடித்து வருவதால் எப்படி ராமராஜனுடன் நடிப்பது என்ற யோசனையில் சம்மதம் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருவதாக முணுமுணுக்கப்படுகிறது. இதனால் ராமராஜன் என்ன செய்யபோகிறார் என்று அந்த படத்தின் இயக்குனர் முழித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 227

1

0