அழகில் அம்மாவையே ஓவர்டேக் செய்யும் மகள்.. ரம்பா மகளுக்கு குவியும் ஃபேன்ஸ்..!

Author: Vignesh
15 February 2024, 5:09 pm

90ஸ் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவரான இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி , போஜ்புரி உள்ளிட்ட பல மொழி படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருந்தார்.

தமிழில் அவர் நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான உழவன் ஆகும். அவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித் தந்தது. அருணாச்சலம் படத்தில் ரம்பாவின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. படங்களில் கவர்ச்சியாக வலம் வந்த ரம்பாவை ரசிகர்கள் அவரை தொடை அழகி என்று அழைத்தனர்.

rambha

ரம்பா கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார். தொடர்ந்து 90ஸ் மற்றும் 20ஸ் ஆரம்பத்தில் தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்து வந்தார். பின்னர் இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில், ரம்பா புது வீடு கட்டி குடிபெயர்ந்துள்ளார். அதன் கிரகப்பிரவேசம் பூஜையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இந்நிலையில், அம்மா ரம்பாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அவரது மகள் தோன்றியிருக்கிறார். சமீபத்தில் தன் மகளுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!