நான் இன்னும் 35 வருஷம் நடிப்பேன்… ரசிகர்களுக்காக சபதம் எடுத்த ஷாருக்கான்!

Author: Rajesh
15 February 2024, 4:59 pm

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகரான ஷாருக்கான் இந்தி சினிமா உலகத்தில் நடிகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் இப்படி பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். இவர் 1980களில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார். அதன் பின்னர் 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து உலகம் முழுக்க பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்தார்.

shahrukh khan

அதன் பின்னர் தொடர்ந்து பெரும் பொருட்செலவில் உருவாகிய ஜவான் படத்தில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் உருவாகிய இத்திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகிய இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்திருந்தார். இப்படம் சுமார் ரூ. 644 கோடி வசூலித்து அபார சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷாருக்கான். அந்த நிகழ்ச்சியில் தன் கெரியர் பற்றி பேசினார். அதாவது, ” நான் என் கெரியரை போதும் முடித்துக்கொள்ளலாம் என விரும்புகிறேன். ஆனால் அது தற்போதைக்கு முடியாது. என் கெரியர் முடிய இன்னும் 35 ஆண்டுகள் இருக்கிறது. என் ரசிகர்களுக்காக தொடர்ந்து நான் நடிப்பேன் என்றார்.

தொடர்ந்து நீங்கள் ஏன் ஹாலிவுட் படத்தில் நடிக்கவில்லை?என கேட்டதற்கு…. மொத்த உலகமும் விரும்பும் படத்தில் நடிக்க விரும்புகிறேன். அதன் பிறகு யாரும் என்னை பார்த்து நீங்கள் ஏன் ஹாலிவுட் படத்தில் நடிக்கவில்லை என்று கேட்கக் கூடாது. நான் நடிக்கும் அந்த படம் அனைத்து எல்லைகளையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்பது தான் என் நோக்கம் என கூறினார்.

  • Trisha at Marudhamalai Temple Viral Video பக்தி பரவசத்தில் நடிகை த்ரிஷா…கோவை மருதமலையில் சிறப்பு வரவேற்பு…!
  • Views: - 265

    0

    0