பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு இறுகும் பிடி… சிறப்பு தணிக்கை குழு வழக்குப்பதிவு!!

Author: Babu Lakshmanan
3 May 2024, 11:08 am

ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் சிக்கிய மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு தணிக்கை குழு வழக்குப்பதிவு செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதியின் ம.ஜ.த., எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணா (33). முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். ஆபாச வீடியோ வழக்கில் சிக்கி உள்ளார். 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது, பணிப் பெண் பரபரப்பு புகார் அளித்ததால் மஜதவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அவர் கட்சியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை மாநில அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர். பிரிஜ்வல் ரேவண்ணா தற்போது, ஜெர்மனியில் உள்ளார்.

மேலும் படிக்க: இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்… வார இறுதியில் மளமளவென குறைவு… வாடிக்கையாளர்கள் குஷி!!

வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய பிரஜ்வல் ரேவண்ணா, சமூக வலைதளங்களில் தம் பக்கம் நியாயம் இருப்பதாக கூறியிருந்தார். மேலும் எஸ்.ஐ.டி. அதிகாரிகளை நேரில் சந்தித்த பிரஜ்வல் ரேவண்ணாவின் வழக்கறிஞர்கள், வெளிநாட்டில் இருப்பதால் அவர் ஆஜராக ஒரு வார கால அவகாசம் கேட்டிருந்தனர். ஆனால் இந்த அவகாசத்தை தர எஸ்.ஐ.டி. மறுத்துவிட்டது.

அத்துடன் வெளிநாட்டுக்கு ஓடிப் போய்விட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்வதிலும் எஸ்.ஐ.டி. தீவிரமாக இறங்கிவிட்டது. இதன் முதல் கட்டமாக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக எஸ்.ஐ.டி. தரப்பில் லுக் அவுட் நோட்டீஸ்-தேடும் குற்றவாளி என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்று தெரிகிறது.

இந்த நிலையில், ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு தணிக்கை குழு வழக்குப்பதிவு செய்துள்ளது. மாஜிஸ்திரேட்டு முன்பு பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்புணர்வுக்கான சட்டப்பிரிவும் எப்.ஐ.ஆரில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா மீது 376(1)N, 354b, 354c, 506 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தணிக்கை குழுவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 318

    0

    0