50 மணிநேரம் ரஜினிகாந்த் பற்றி பேசி உலக சாதனை – RJ விக்னேஷிற்கு குவியும் வாழ்த்துக்கள்!

Author:
6 September 2024, 5:52 pm

திரைப்பட நடிகரும் , நிகழ்ச்சி தொகுப்பாளரும், YouTube பிரபலமும் ஆன விக்னேஷ் காந்த் முதன்முதலில் மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் விக்னேஷ் காந்த்.

vigneshkanth

முன்னதாக இவர் சென்னை 28- 2 திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மீசைய முறுக்கு திரைப்படத்தில் ஜீவா எனும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார். இதனிடையே YouTube வலைதளத்தில் ஸ்மைல் சேட்டை எனும் நிகழ்ச்சியை தொடங்கியதன் மூலம் மிகவும் பரவலாக வாலிப வட்டங்களால் அறியப்பட்டார்.

மேலும் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரைப்படத்தில் பாடல் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். இவரது நடிப்பில் தேவி ,துணை, மெஹந்தி சர்க்கஸ் ,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, களவாணி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் ஹீரோக்களின் நண்பனாக நடித்துவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

vigneshkanth

மேலும் தேவ், டக்கர், கழக தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவருக்கு பெரும் பெயர் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்று கேட்டீர்கள் ஆனால், நடிகர் விக்னேஷ் காந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி தொடர்ந்து 50 மணி நேரம் சூப்பர் ஸ்டாருக்கு சல்யூட் என்ற நிகழ்ச்சியில் பேசி உலக சாதனை படைக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சி இன்று மாலை 4 மணி முதல் செப்டம்பர் 8ம் தேதி மாலை 6 மணி வரை பாட்காஸ்டில் பேச உள்ளார். சூப்பர் ஸ்டாரை பற்றி தொடர்ந்து 50 மணிநேரம் பேசி உலக சாதனை படைக்கப் போகும் விக்னேஷ் காந்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?