தொடரும் மனஸ்தாபம்… விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சியின் அதிரடி முடிவு: கலக்கத்தில் தளபதி..!

Author: Vignesh
6 February 2023, 2:30 pm

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பல முகங்களை கொண்டு விளங்கி வருபவர் எஸ்.ஏ. சந்திரசேகர். கோலிவுட்டில் அவர் ஒரு பச்சை குழந்தை என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படம் தான் இவரை பிரபலம் அடைய வைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 70திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

SAChandrashekar_ActorVijay_updatenews360

மேலும், தனது மகனும் பிரபல நடிகருமான தளபதி விஜய் அவர்களை அறிமுகம் செய்து வைத்ததும் இவர் தான். சந்திரசேகர் அவர்கள் இயக்கிய படங்கள் மூலமாக மக்களுக்கு நிறைய நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே பிரச்சனை இருப்பதால், இவர் தனது தாய், தந்தையை விட்டு மனைவி பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இதற்கெல்லாம் காரணம் விஜய்யின் மனைவி சங்கீதா என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டாலும், அவை யாவும் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Vijay SAngeetha - Updatenews360

மகன் தன்னை கைவிட்டாலும் தொடர்ந்து சினிமாவில் படங்களை இயக்கி வரும் எஸ்.ஏ.சி., சமீபத்தில் உருவான நான் கடவுள் இல்லை திரைப்படம் இவர் இயக்கத்தில் திரைக்கு வந்தது.

இதனையடுத்து, அடுத்ததாக சீரியலில் களமிறங்க எஸ்.ஏ.சி. திட்டமிட்டுள்ளாராம் ஆம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியலில் எஸ்.ஏ.சி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராதிகாவின் ரடான் தயாரிப்பு நிறுவனம் இந்த சீரியலை தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!