சாய் பல்லவி வீட்ல விசேஷம்.. திருமண ஏற்பாடா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!

Author: Vignesh
17 January 2024, 1:52 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

இந்நிலையில், தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 தெலுங்கில் நாகசைதன்யாவுடன், தன்டேல் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

sai-pallavi

இவரின் தங்கை பூஜா கண்ணனும் படத்தில் நடித்துள்ளார். அதாவது, சமுத்திரகனியுடன் இவர் சித்திரை செவ்வானம் என்ற படத்தில் நடித்த பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். தனது காதலனை தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், இந்த அழகானவர் தான் எனக்கு உண்மையான அன்பையும் பொருமையையும், காதலிக்க கற்றுக் கொடுத்தது.

sai-pallavi

இது வினித் என் சூரிய ஒளி சமீப காலம் வரை எனது குற்றத்தில் எனது துணை இப்போது, அவர் என் வாழ்க்கை துணையாக இருக்கப் போகிறார். நான் உன்னை காதலிக்கிறேன் என் துணை என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இவர் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • supreme court told that put case on who ever try to stop the release of thug life movie தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி