சினிமாவிற்கு வருவதற்கு முன் மாளவிகா மோகனன்.. துளி கூட மேக்கப் போடாமல் எடுத்த வீடியோ..!

Author: Vignesh
17 January 2024, 1:24 pm
Malavika Mohanan - updatenews360
Quick Share

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

Malavika Mohanan - updatenews360

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் மூலம் அவர் பிரபலமான நடிகையாகபார்க்கப்பட்டார் . அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Malavika Mohanan - updatenews360

இந்நிலையில், கிளாமருக்கு பேர் போன நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன் தற்போது, பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்தவரும் தங்களால் திரைப்படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இதுவரை நாம் பார்த்திடாத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

Malavika Mohanan - updatenews360

இந்நிலையில், மாளவிகா மோகனன் நடிக்க வருவதற்கு முன் எடுத்த வீடியோ ஒன்று தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிப்பை கற்றுக்கொள்ள பிரபல நடிப்பு பட்டறை ஒன்றில், கலந்து கொண்டுள்ள போது எடுக்கப்பட்ட வீடியோ தான் அது. இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் நம்ம மாளவிகா மோகனா இது? ஆள் அடையாளமே தெரியவில்லை என தெரிவித்து வருகின்றனர்.

Views: - 218

0

0