உன் உடம்பு…. செம கடுப்பாக்கிய ரசிகருக்கு கோபத்துடன் பதில் கொடுத்த சமந்தா!

Author:
5 November 2024, 5:20 pm

பிரபல நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார். திரைத்துறையை சாராத குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் நடிகை சமந்தா.

ஆரம்பத்தில் வெல்கம் கேர்ளாக கடைகளில் பணியாற்றி அதன் பிறகு மாடலிங் துறையில் தனது ஆர்வத்தை செலுத்தி பிறகு திரைப்பட வாய்ப்பு கிடைக்க கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மேற்கேற்றி இன்று தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக பெயர் எடுத்திருக்கிறார்.

samantha

தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் அடுத்தடுத்து தொடர் ஹிட் திரைப்படங்கள் கை கொடுத்ததால் அங்கும் நட்சத்திர நடிகையாக தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் வீட்டு பெண்ணாகவே சமந்தா பார்க்கப் பட்டார்.

அந்த அளவுக்கு இவரது வளர்ச்சி மிக குறுகிய காலத்திலேயே புகழ்பெற்றது. பிரபல இளம் ஹீரோவான நாக சைதன்யாவை காதலித்து வந்த நடிகை சமந்தா 8 ஆண்டு காதலுக்கு பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. குறிப்பாக காதல் ஜோடிகளின் எடுத்துக்காட்டான ஜோடியாக பார்க்கப்பட்டார்கள்.

இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். விவாகரத்துக்கு பிறகு சமத்தா தன்னுடைய கெரியரில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது சிட்டாடல் ஹனி பனி என்ற தொடரில் நடித்த வருகிறார் .

samantha

இந்த தொடரின் ப்ரோமோஷன்களில் படு பிஸியாக இறங்கி இருக்கும் சமந்தா சமீபத்தில் instagram லைவ்வில் தனது ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்த சமந்தா விடம் ரசிகர் ஒருவர் உடல் எடையை கொஞ்சம் அதிகரிக்குமாறு தெரிவித்து கமெண்ட் செய்திருந்தார்.

இதையும் படியுங்கள்:

அதை பார்த்து செம கடுப்பான சமந்தா எனது எடை குறித்து மற்றொரு கருத்து நான் எனது எடையை குறித்த பல்வேறு கருத்துக்களை சமீபத்தில் தொடர்ந்து பார்த்து வருகிறேன். உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். நான் ஒரு கடுமையான கடுமையான strict anti-inflammatory diet-ஐ பின்பற்றி வருகிறேன்.

samantha

இது எனது உடலுக்கு தேவை. இதுதான் எனது உடலை அதிக எடையிலிருந்து தடுத்து, எனது உடல் நலனுக்கு (myositis) ஏற்றவாறு சரியான அளவில் என்னை வைத்திருக்க உதவுகிறது. எனவே தயவுசெய்து மனிதர்களை உடலை வைத்து விமர்சிப்பதை நிறுத்துங்கள். 2024-க்கு வந்துவிட்டோம். வாழு, வாழ விடு என சமந்தா அந்த ரசிகருக்கு காட்டமாக பதில் அளித்திருக்கிறார்.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 79

    0

    0