சந்தானத்திற்குள் இருக்கும் அதிசய சக்தி? வேற லெவல் ஆளா இருக்குறாரே இவரு?

Author: Prasad
15 May 2025, 12:04 pm

டிடி நெக்ஸ்ட் லெவல்

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்த “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் நாளை (மே 16) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் சந்தானத்துடன் யாஷிகா ஆனந்த், கீதிகா திவாரி, கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். 

santhanam said that he knew at first day shooting of all in all azhaguraja movie that this movie will flop

கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “டிடி ரிட்டன்ஸ்” திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அதன் வரிசையில் வெளியாகும் “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. இத்திரைப்படத்தின் டிரெயிலரே மிகவும் அட்டகாசமாக இருந்தது. 

இந்த படம் கண்டிப்பா ஃப்ளாப்தான்…

“டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கான புரோமோஷன் பேட்டிகளில் ஈடுபட்டு வருகிறார் சந்தானம். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது, “ஒரு படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்துவிட்டு முதல் நாள் ஷுட்டிங்கில் கலந்துகொள்ளும்போதே தெரிந்துவிடும். அப்படம் ஃப்ளாப் ஆகுமா இல்லையா என்பது. ஆல் இன் அழகுராஜா படம் எடுத்துக்கொண்டிருந்த சமயத்திலேயே அத்திரைப்படத்தின் இயக்குனர் ராஜேஷிடம் நான் நேரடியாகவே சொல்லிவிட்டேன். இது ஒர்க் அவுட் ஆகாது என்று. 

santhanam said that he knew at first day shooting of all in all azhaguraja movie that this movie will flop

நான் பெண் வேடமிட்டு நடித்த கரீனா சோப்ரா என்ற கதாபாத்திரம் அப்படத்தின் மிக முக்கிய கதாபாத்திரம் ஆகும். வில்லன் கதாபாத்திரம் அந்த கரீனா சோப்ராவை காதலிக்கும் வகையில் எழுதியிருப்பார்கள். இதற்கு அவ்வை சண்முகி படத்தை போல் மேக்கப் செய்ய வேண்டும், இவர்கள் இவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்கள் என்று ஆடியன்ஸ் நினைக்கவேண்டும். அப்போதுதான் ஒர்க் அவுட் ஆகும் என்று கூறினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. எல்லா படத்திலும் முதல் நாள் படப்பிடிப்பிலேயே தெரிந்துவிடும் இது ஃப்ளாப் ஆ? இல்லையா? என்று” என கூறினார். 

கார்த்தி கதாநாயகனாக நடித்த “ஆல் இன் ஆல் அழகுராஜா” திரைப்படத்தில் சந்தானம் இடம்பெற்ற காட்சிகள் சிரிப்பலையே ஏற்படுத்தின என்றாலும் அத்திரைப்படம் சரியாக போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

  • ravi mohan feeling sad that his children used as a tool for financial gain கையெழுத்து போட மட்டும் அப்பா தேவையா? பக்கத்துக்கு பக்கம் ஆதங்கத்தை கொட்டிய ரவி மோகன்!
  • Leave a Reply