இது தாறு மாறான கார்.. புதிய காரை வாங்கிய கையோடு Vijay Tv சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ..!

Author: Vignesh
20 May 2024, 10:40 am

வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும். குறும்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

Nakshathra Nagesh - updatenews360

மேலும் படிக்க: வாய்ப்பு கிடைக்கறதே பெரிய விஷயம்.. இதுல போராட வேண்டியதா இருக்கு : ரஜினி பட நடிகை வருத்தம்!

நடிகை நக்ஷத்ரா சீரியல்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ராகவ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

மேலும் படிக்க: நான் ஒன்னும் இல்லாமல் வந்தவள் இல்லை.. கடுப்பான ரெடின் கிங்ஸ்லி மனைவி..!

இந்நிலையில், திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பெரிய அளவில் சினிமா வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரையில் கவனம் செலுத்தி வந்தார். கடைசியாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தமிழும் சரஸ்வதியும் தொடரில் நாயகியாக நடித்து வந்தார். தற்போது, அந்த தொடர் முடிந்துவிட்ட நிலையில் புதிய கார் ஒன்று வாங்கியுள்ளார். இன்ஸ்டால் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் புதிய கார்ருடன் எடுத்த போட்டோக்களை வெளியிட அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!