நிச்சயதார்த்தம் முடிஞ்ச உடனே அந்த டார்ச்சர் – சீரியல் நடிகை குமுறல்!

Author:
31 July 2024, 11:02 am

தமிழ் தொலைக்காட்சியில் பல்வேறு சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமான தொலைக்காட்சி சீரியல் நடிகை தான் நடிகை சந்தியா. இவர் சந்திரலேகா, அத்திப்பூக்கள் போன்ற பல்வேறு சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த சீரியல் நடிகையாக இருந்து வந்தார். மேலும் திரைப்படங்களில் ஒரு சில படங்களிலும் குணசத்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

இவருக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை திருமணமாக இரண்டு வருடங்களிலே கணவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். தற்போது தெரு நாய்களை தத்தெடுத்து வளர்க்கும் தொழிலை செய்து வருகிறார். அதுவே தனக்கு மிகுந்த மன நிம்மதியை கொடுப்பதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் .மேலும் தனது கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகை சந்தியா,

யாருக்கும் தெரியாத விஷயம்…எங்கேஜ்மென்ட் ஆன உடனே எனக்கு அவர் நிறைய டார்ச்சர்களை கொடுத்தார். ரொம்ப சந்தேகம் பிடித்தவர். என்னுடைய போனை பிடிங்கி பார்த்து அதில் யார் யார் என்னுடன் பேசி இருக்கிறார்கள் என்பதெல்லாம் பற்றி கேள்வி கேட்டு என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். நிச்சயதார்த்தம் நடந்த உடனே அவரது சந்தேக புத்தி எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அவர் மிகவும் டார்ச்சர் செய்து வந்தது எனக்கு தொல்லையாக இருந்தது. போனை வாங்கி அவர் என்னவோ பார்க்க கூடாததை பார்த்த மாதிரி ரொம்பவும் சண்டை போட்டார். என் ரசிகர் ஒருவர் சீரியலில் நான் நன்றாக நடித்திருந்தேன் என கூறிய மெசேஜை பார்த்துவிட்டு யார் இதை இப்படி பேசுகிறார்? என்று மிகவும் கொச்சையாக என்னை கேள்வி கேட்டார். இதெல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை கூறி அதிர வைத்தார்.

  • manikandan rajesh sobhithaseparation சினிமா பிரபலங்களுக்கு என்ன ஆச்சு…விவாகரத்து வாங்கிய பிரபல நடிகை…!
  • Views: - 162

    0

    0