படிக்காதவன் பட குட்டி ரஜினி மரணம்.. மறைந்த அண்ணனுக்காக எமோஷ்னல் பதிவு போட்ட நடிகை சுஜிதா..!

Author: Vignesh
15 March 2024, 3:27 pm
sujithadhanush - updatenews360-1
Quick Share

ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் இணைந்து நடித்த படிக்காதவன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்த விஷயம். இந்த படத்தில் குட்டி ரஜினி ஆக வந்த சிறுவனை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. ரஜினியின் இளம் வயதில் நடித்த அந்த சிறுவன் வேறு யாருமில்லை மாஸ்டர் சுரேஷ் தான். இவருடைய இயற்பெயர் சூரிய கிரன் மாஸ்டர் சுரேஷ் ரஜினி படங்கள் மட்டுமின்றி கமல், விஜயகாந்த், பிரபு, சிரஞ்சீவி, நாகர்ஜுனா, அமிதாப்பச்சன் உடன் இணைந்து மொத்தம் 200 படங்களில் நடித்திருக்கிறார்.

rajini - updatenews360

இந்த நிலையில், நடிகர் மாஸ்டர் சுரேஷ் சமுத்திரம் என்ற படத்தில் சரத்குமாருக்கு சகோதரியாக நடித்த காவிரியை திருமணம் செய்து கொண்டு, அதன் பின் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் பெற்றார். மேலும், மாஸ்டர் சுரேஷ் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சுஜாதாவின் அண்ணன் என்பது பலரும் அறிந்திடாத விஷயம்.

ps - updatenews360

மாஸ்டர் சுரேஷ் என்ற பெயரில் சிறு வயதில் நடித்து வந்தாலும், சூர்ய கிரண் என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்ட இவர், பின்பு சில படங்களையும் இயக்கி இருந்தார். தற்போது, நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்து முடித்துள்ள அரசி என்ற திரைப்படத்தினை இயக்கி உள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், தற்போது உயிரிழந்து உள்ளார். முன்னதாக, நடிகர் சூரிய கிரண் சமீப காலமாக உடல்நிலை குறைவினால் அவதிப்பட்டு உள்ளார்.

director surya kiran

மஞ்சள் காமாலை காரணமாக ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நோயின் தாக்கம் அதிகரித்ததால், வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருந்தநிலையில், உயிரிழந்து இருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது 48 வயதில் இயக்குனராக கலக்கிய சூர்ய கிரண் திடீரென உயிரிழந்துள்ளது திரைத்துறையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சீரியல் நடிகை சுஜிதா உயிரிழந்த தனது அண்ணனுக்காக எமோஷ்னல் பதிவு ஒன்று போட்டுள்ளார். இதோ அவரது பதிவு,

Views: - 66

0

0