காதலனுடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி ஹாசன் – ட்ரடிஷ்னல் கிளிக்ஸ்!

Author: Shree
14 November 2023, 11:30 am

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.

அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்துவார்.தொடர்ந்து கிடைக்கும் படங்களில் நடித்து வருவதோடு எப்போதும் சமூகவலைத்தளங்களில் செம ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தனது காதலன் சாந்தனு ஹசாரிகாவுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். அதில் ட்ரடிஷனல் லுக்கில் ரொமான்ஸ் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்ஸ் ” எல்லாம் சரி கல்யாணம் எப்போ? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?