கட்டிப்பிடிச்சு முத்தமிட்ட விஜய் சேதுபதி – உன் சவகாசமே வேண்டாம்னு ஓட்டம் பிடித்த ஸ்ருதி ஹாசன்!

Author: Shree
17 April 2023, 9:07 pm

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்.

ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.

தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் லாபம். இப்படம் கொரோனா லாக்டவுன் சமயத்தில் வெளியானது. அப்போது விஜய் சேதுபதி ரசிகர்களை அழைத்து கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்து இடைவெளியை கடைப்பிடிக்காமல் நடந்து கொண்டாராம்.

நோய் தொற்று அதிகரித்து வரும் நேரத்தில் இவர் ஏன் இப்படி சமூக இடைவெளியில்லாமல் நடந்துகொள்கிறார்? என கோபப்பட்டு ஸ்ருதி ஹாசன் ஷூட்டிங்கை விட்டே ஓடிவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லையாம். லாபம் படத்தின் ஷூட்டிங்கில் ரசிகர்கள் பார்வையிட கூட அனுமதியில்லாத சமயத்தில் விஜய் சேதுபதி எப்படி சந்தித்து கட்டியணைத்து முத்தம் கொடுத்திருப்பார்? அதிலும் விஜய் சேதுபதி ரசிகர்கள் நலனில் அக்கறை கொண்டவர் அவர் நிச்சயம் அப்படி நடந்துக்கொண்டிருக்கமாட்டார் என கூறுகிறது சினிமா வட்டாரம்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!