குஷி படத்தின் மாபெரும் வெற்றி…. படக்குழுவினருக்கு SJ சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!

Author: Shree
16 June 2023, 6:42 pm

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வசூல் குவித்து வெற்றி பெற்ற திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருப்பார். இவர்களது கெமிஸ்ட்ரி இப்படத்தில் அவ்வளவு அற்புதமாக இருந்தது. இன்றும் இப்படத்தை டிவியில் திரையிட்டால் குடும்பமே ஒன்றாக அமர்ந்து பார்ப்பார்கள்.

எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜயகுமார், ஷில்பா ஷெட்டி, மும்தாஜ், விவேக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் மற்றும் ஜோதிகா இருவரும் ஒரே காலேஜில் படிப்பார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து நண்பர்களின் காதலுக்கு உதவி செய்வார்கள்.

அந்த சமயத்தில் இவர்களுக்கிடையே நட்பு உருவாகி அதுவே காதலாகிவிடும். ஆனால் அதை வெளிப்படையாக சொல்லிக்கொள்ளாமல் மறைமுகமாக காதலிப்பார்கள். பின்னர் possessive’வினால் வரும் மோதல்களால் இவர்கள் பிரிய நேரிடும். பின்பு ஒருவரை ஒருவர் மறக்க முடியாமல் தவித்து வருவார்கள்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இவர்கள் குடும்பத்தின் சம்மதத்துடன் ஒன்று சேரும் காட்சியில் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் இருவரும் ஓடி வந்து பின்னர் விஜய் ஜோதிகாவுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்திருப்பார். இந்த காட்சி அப்போதே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த லிப்லாக் காட்சியில் நடிக்க விஜய் – ஜோதிகா இருவருமே யோசித்து தயங்கியுள்ளனர். அதன் பின் SJ சூர்யா தான் இது படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என கூறி சம்மதித்தாராம். அவர் சொன்னது போலவே ஹிட் அடித்தது.

சொல்லப்போனால் எதிர்ப்பத்தைவிட மிகப்பெரிய வெற்றி பெற்றதால் எஸ்ஜே சூர்யாவுக்கு தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய தொகையை கொடுத்து மகிழ்ச்சி படுத்தினார்களாம். ஆனால், எஸ்ஜே சூர்யா மட்டும் மகிழ்ச்சி அடையாமல் இதற்காக கடுமையாக உழைத்த உதவி இயக்குநர்களுக்கு 7 பைக் வாங்கி கொடுத்துள்ளார். அதில் ஏ. ஆர் முருகதாஸ், நடிகர் மாரியப்பன் உள்ளிட்டோருக்கும்கொடுத்தாராம். அந்த பைக்கை இன்னும் நான் வைத்திருப்பதாக நடிகர் மாரிமுத்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். எஸ்ஜே சூர்யாவின் இந்த நல்ல மனசை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

https://www.youtube.com/shorts/Xtb_iK3VYK8
  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?