முற்றிலும் புதிய தோற்றத்தில் மிரட்ட வரும் எஸ்.ஜே.சூர்யாவின் ‘மார்க் ஆண்டனி’ போஸ்டர் வெளியீடு..!

Author: Vignesh
5 October 2022, 6:00 pm

‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடிக்கர் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் புதிய லுக் போஸ்டராக வெளியாகியுள்ளது.

இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘லத்தி’. இப்படத்தினை தமிழ் நடிகர்களான ரமணா மற்றும் நந்தா இணைந்து ‘ராணா புரொடக்ஷன்’ என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றனர். இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஷால் அடுத்ததாக நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தை ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாக நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் விஷாலின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. அதில் அவர், தாடி, மீசையுடன் கையில் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்சியளித்திருந்தார்.

அந்த வகையில், தற்போது நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் லுக் வெளியாகியுள்ளது. ஜாக்கி பாண்டியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு, நீளமான மீசையுடன், பெல்ஸ் பேண்டை அணிந்துகொண்டு ரெட்ரோ லுக்கில் காட்சியளிக்கிறார்.

இந்த போஸ்டரில் இருப்பது எஸ்.ஜே.சூர்யாவா என கேள்வி எழுப்பும் அளவுக்கு முற்றிலும் புதிய தோற்றத்தில் உருமாறி ஈர்க்கிறார். படம் இந்தாண்டு இறுதியில் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?