முதல்ல கிளம்புங்க.. ரஜினிக்கு தங்கச்சியா நடிக்க முடியாது.. பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..!

Author: Vignesh
26 February 2024, 10:11 am
rajini - updatenews360
Quick Share

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தை தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் படத்தில் நடித்து படம் வெளியான நிலையில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

rajinikanth

பொதுவாக, ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்பது பல நடிகர் நடிகைகளின் கனவாக இருக்கிறது. ஆனால், பிரபல நடிகை ஒருவர் ரஜினியின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும். ஒரு சில காரணங்களால் அப்படத்தை நிராகரித்துள்ளார். அவர் வேறு யாருமில்லை புன்னகை அரசி நடிகை சினேகா தான். நடிகை சினேகாவிற்கு ரஜினியின் தங்கையாக கோச்சடையான் படத்தில், நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

sneha prasanna - updatenews360.jpg e

முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட அவர், அதன் பின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்ததால், கால்ஷீட் இல்லை என்ற காரணத்தைக் கூறி அந்த படத்தை நிராகரித்து விட்டாராம். அதன் பின்னர், சினேகா நடிக்க விருந்த ரஜினியின் தங்கை கதாபாத்திரத்தில் ஆனந்த தாண்டவம் பட நடிகை ருக்மணி நடித்திருந்தார்.

Views: - 116

0

0