ராஜமவுலியால் கூட உடைக்க முடியாத ரஜினியின் சாதனை..! 27 வருடங்களாக முறியடிக்கப்படாத சாதனையைக் கொண்ட அந்த படம்..!

Author: Vignesh
8 December 2022, 10:45 am

பல கோடி செலவு செய்து புரமோட் செய்தும் ஆர்.ஆர்.ஆர் படத்தால் சூப்பர்ஸ்டார் ரஜினியின் முத்து பட சாதனையை நெருங்க முடியவில்லை. இதன்மூலம் சூப்பர்ஸ்டார் ஜப்பான் தனது கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் நடிகர் ரஜினிகாந்த்துக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. உலகளவில் ரஜினிக்கு உள்ள மவுசை வைத்து தான் அவரை இந்திய திரையுலகமே சூப்பர்ஸ்டாராக ஏற்றுக்கொண்டது.

Rajini muthu Film - updatenews360

குறிப்பாக ஜப்பானில் ரஜினிக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. இதற்கு காரணம் அவர் நடித்த முத்து படம் தான். அந்த ஒரே படத்தின் மூலம் ரஜினிக்கு ஓட்டுமொத்த ஜப்பானியர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜப்பானில் இந்திய படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காமல் இருந்து வந்தது. அதனை தகர்த்தெறிந்தது முத்து திரைப்படம். இப்படம் அங்கு வெளியாகி மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது மட்டுமின்றி ஜப்பானில் முத்து திரைப்படம் மட்டும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.22 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டியது.

இப்படத்துக்கு பின்னர் தான் ஜப்பானில் இந்திய படங்கள் படிப்படியாக வெளியாகி வரவேற்பை பெற்றன. ரஜினியின் முத்து திரைப்படம் அங்கு செய்த வசூல் சாதனையை இதுவரை எந்த இந்திய படமும் முறியடிக்கவில்லை.

சமீபத்தில் ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தை ஜப்பானில் வெளியிட்டனர். இப்படம் அங்கு ரிலீஸ் ஆவதற்கு முன் பல கோடி செலவு செய்து புரமோஷன் எல்லாம் செய்தனர்.

RRR-updatenews360

இதனால் ஆர்.ஆர்.ஆர் படம் ரஜினியின் முத்து பட சாதனையை முறியடித்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களாலும் அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.
ஆர்.ஆர்.ஆர் படம் ஜப்பானில் மொத்தமாக ரூ.20 கோடி மட்டுமே வசூலித்தது. இதன்மூலம் ரஜினியின் முத்து திரைப்படம் ஜப்பானில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்கிற சாதனையை தக்கவைத்து உள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?