ஃபாரினர் உடன் காதல்… நெருக்கமான போட்டோக்களை வெளியிட்டு திருமணத்தை உறுதி செய்த டாப்ஸி!
Author: Rajesh28 பிப்ரவரி 2024, 5:05 மணி
தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அந்த படத்தில் இவருக்கும் தனுஷுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. அதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.
சமீப நாட்களாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அழுத்தமான ரோலில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது 35 வயதாகும் டாப்ஸி பார்ப்பதற்கு இன்னும் அதே இளமையோடு தான் இருக்கிறார். இந்நிலையில் டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மதியாஸ் போவ் என்பவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறாராம்.
ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடிக்கு அவர்களின் இருவீட்டிலும் பச்சைக்கொடி காட்டிவிட்டார்களாம். இதையடுத்து டாப்ஸி மதியாஸ் போவை திருமணம் செய்து கொள்ளப் போகிறார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தான் டாப்ஸி, மதியாஸ் போவின் திருமணம் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறதாம். இதில் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைத்துறையை சார்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படமாட்டாது என கூறப்படுகிறது. மேலும் இத்திருமணம் சீக்கிய மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடக்கிறதாம். தற்போது இந்த ஜோடியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
0
0