ஒண்ணு அங்க இருக்கணும், இல்ல இங்க இருக்கணும்.. சீரியலில் இருந்து வெளியேறிய சிறகடிக்க ஆசை நடிகை..!

Author: Vignesh
28 February 2024, 5:20 pm
Siragadikka-Aasai
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர் என்றால் சிறகடிக்க ஆசையை சொல்லலாம். முத்து மீனாவை மையமாக வைத்து மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். நிறைய புது முகங்கள், சில பழைய நடிகர்களை வைத்து தொடங்கப்பட்ட இந்த சீரியல் 300 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

siragadikka aasai

கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் மூன்றாவது மகன் ரவியின் மனைவியாக நடிக்கும் ப்ரீத்தா ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலை தாண்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரிலும், அக்ஷயா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இரண்டு தொடர்களிலும் சரியான நேரம் ஒதுக்கி நடிக்க முடியவில்லை என்பதால் இனியா தொடரில் இருந்து ப்ரீத்தி விலகியுள்ளார்.

 siragadikka aasai

Views: - 81

0

0