ரொனால்டோ மீம்ஸ்… 40 கதை அஸ்வினை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

Author: Rajesh
31 January 2022, 11:42 am
Quick Share

விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி தொடரின் மூலம் அறிமுகி அதன்பிறகு சில படங்களிலும், ஆல்பம் சாங்களிலும் நடித்தவர் தான் அஸ்வின். ஆனால் அஸ்வினுக்கு பெரிய அளவில் எங்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே மீண்டும் விஜய் டிவிக்கு வந்து குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பால் அஸ்வினுக்கு படவாய்ப்பு வரத்தொடங்கியது.

அஸ்வின் நடித்த “என்ன சொல்ல போகிறாய்” படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இதுவரை 40க்கும் மேற்பட்ட கதைகள் கேட்டுள்ளேன், கதை கேட்கும் போதே பிடிக்கவில்லையென்றால் தூங்கி விடுவேன் என்ற அஸ்வினின் ஆணவப் பேச்சுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து அவர் நடித்த என்ன சொல்லப் போகிறாய் படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியானது. 40 கதை கேட்ட அஸ்வின் இந்தக் கதைக்கும் தூங்கி இருக்கலாம் என ரசிகர்கள் இணையத்தில் வறுத்தெடுத்தனர்.

என்ன சொல்லப் போகிறாய் படத்தின் தோல்விக்கு அஸ்வினுடைய ஆணவப் பேச்சு தான் காரணம் என படக்குழு, தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட அஸ்வினிடம் சொல்லியுள்ளார்கள். ஆனால் அஸ்வின் என்னால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என மறுத்து விட்டாராம். இதனால் அஸ்வின் மேல் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் படக்குழுவினர் கோபத்தில் உள்ளார்களாம்.

இது ஒரு பக்கம் இருந்த போது, இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழு நடத்திய ரசிகர்கள் மீட்டிங்கில் அஸ்வின் மற்றும் அந்த படத்தின் ஹீரோயின் பங்கேற்றனர். அதில் அஸ்வின் தன்னுடைய ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தலையில் விக், தாடி, தொப்பி என்று மாறுவேடத்தில் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார்.

அஸ்வின் இப்படி மாறுவேடத்தில் வந்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இதை பார்த்த நெட்டிசன்கள் ரொனால்டோவை மையப்படுத்தி அஸ்வினை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Views: - 558

0

0