காலை 9 மணி சிறப்பு காட்சி? கூலி படக்குழுவிற்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு…
Author: Prasad12 August 2025, 6:49 pm
அரங்கம் அதிர வெளியாகும் கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் அதிகளவு வரவேற்பு உள்ளது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது, அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த வாரத்திற்கான டிக்கெட்டுகள் மளமளவென விற்றுத் தீர்ந்தன. இத்திரைப்படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் மிகவும் வெறித்தனமாக இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

9 மணி காட்சிக்கு அனுமதி
இந்த நிலையில் “கூலி” திரைப்படம் வெளியாகும் நாளான ஆகஸ்ட் 14 ஆம் தேதி மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. “கூலி” திரைப்படம் வெளியாகும் முதல் நாளில் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை என ஒரு ஐந்து காட்சிகள் திரையரங்குகளில் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
