ரூம்ல போயி பண்ணுங்க… திருப்பதி கோவிலில் கட்டிப்பிடித்து முத்தம் – பிரபாஸின் வருங்கால மனைவிக்கு வலுக்கும் கண்டனம்!

Author: Shree
9 June 2023, 12:36 pm

தெலுங்கு சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் சினிமாவில் அடையாளமின்றி இருந்த பிரபாஸுக்கு பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதனால் அவர் உலகம் முழுக்க பேமஸ் ஆனார். அந்த படத்தில் இவரது நடிப்பு மெய்சிலிர்க்க வைத்தது. முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் அவரே நடித்தார்.

பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் பல கோடி போட்டு அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் படையெடுத்து வந்தார்கள். அதன் பின்னர் சாஹோ போன்ற படங்கள் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டும் தோல்வியடைந்தது. இந்நிலையில் ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ‘ஆதிபுருஷ்’ என்ற திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ராமனாக நடிகர் பிரபாஸ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் சீதையாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சயிப் அலி கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஜூன் 16ம் தேதி வெளியாகிறது. இதற்கான ப்ரோமோஷனில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறார்கள்.

தற்காக அண்மையில் இப்படத்தின் இயக்குனர் ஓம் ராவத் மற்றும் ஹீரோயின் கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் திருப்பதி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது நடிகை கீர்த்தி சனோனை இயக்குனர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியாக, கோவில் வளாகத்தில் இப்படியா அசிங்கமாக நடந்துகொள்வது? என பலர் விமர்சித்தனர்.

இந்நிலையில் தற்ப்போது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள தெலங்கானா சில்குர் பாலாஜி கோவிலின் தலைமை அர்ச்சகர், கணவன், மனைவி கூட அங்கு ஒன்றாக செல்வதில்லை. நடிகை கீர்த்தி சனோன் மற்றும் இயக்குனர் ஓம்ராவத் ஆகியோரின் செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது. நீங்கள் ஓட்டல் அறைக்கு சென்று இதையெல்லாம் செய்யலாம். உங்கள் நடத்தை ராமாயணத்தையும், சீதா தேவியையும் அவமதிப்பது போல் உள்ளது என அவர் விமர்சித்து தள்ளியுள்ளார். தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையுயாக வெடித்துள்ளது. நடிகை கீர்த்தி சனோனை பிரபாஸ் காதலித்து வருகிறார். விரைவில் அவரை திருமணம் செய்யவுள்ளதாக அவரின் பெயரை குறிப்பிடாமல் மேடையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!