அந்த விஷயத்துக்கு கட்டாயப்படுத்திய இயக்குனர்.. NO சொல்லி ஓட்டம் எடுத்த நடிகை.. மாட்டி தவித்த ரம்யா கிருஷ்ணன்..!

Author: Vignesh
9 June 2023, 12:45 pm
ramya krishnan - updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் 80 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். இவர் தன்னுடைய 14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி முதல் படமே இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் முதல் வசந்தம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

ramya krishnan - updatenews360

மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

ramya krishnan - updatenews360

அதன்பின் பல படங்களில் நடித்து வந்தாலும் ரம்யா கிருஷ்ணனுக்கு போதிய அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். இவர் பல ஆண்டுகள் கழித்து படையப்பாவின் நீலாம்பரியாக நடித்தது மிகப் பெரிய அளவில் இவருக்கு கை கொடுத்தது.

ramya krishnan - updatenews360

அதன் பிறகு பாகுபலி படத்தில் சிவகாமி தேவி மேலும் இவருக்கு அதிகப்படியான வரவேற்பு கொடுத்தது. இவரை அனைவரும் ராஜமாதாவாகவே கருதினர். இவரை தவிர யாராலும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு அருமையாக இருந்தது.

ramya krishnan - updatenews360

இதனிடையே 2019 ஆம் ஆண்டில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் முக்கிய ரோலில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த படம் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்தது. முன்னதாக ரம்யா கிருஷ்ணனுக்கு முன் இந்த படத்தில் வேறொரு நடிகை தான் நடித்திருந்தாராம். இயக்குனர் கவர்ச்சியாக நடிக்க கூறி பாடாய்படுத்தி டார்ச்சர் செய்த நிலையில், அந்த நடிகை விட்டா போதும் என்று படத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

ramya krishnan - updatenews360

அதன் பிறகு தான் ரம்யா கிருஷ்ணனை இயக்குனர் அணுகி தயக்கத்துடன் கதையை கூறியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணனும் ஒப்புக்கொண்டு நடிக்கவும் சென்றுள்ளார். அவரையும் இயக்குனர் கடுமையாக வேலை வாங்கிய சம்பவங்கள் நடந்ததாக தகவல் வெளியானது. அப்போது இயக்குனர் மிஷ்கின் இதில் தலையிட்டு அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்துள்ளார் என்று பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.

Views: - 577

0

0