ரஜினியின் உயிர் நண்பன் மருத்துவமனையில் திடீர் அனுமதி…பரபரப்பில் கோலிவுட்..!

Author: Selvan
12 December 2024, 4:52 pm

மோகன் பாபுவின் உடல்நிலை அப்டேட்

நடிகர் ரஜினிகாந்த் இன்றைக்கு தன்னுடைய 74வது பிறந்தநாளை வெகு சிறப்பாக குடும்பத்தோடு கொண்டாடி வருகிறார்.

அவருடைய படங்கள் குறித்து அடுத்தடுத்து அப்டேட் இன்றைக்கு வெளியாக இருக்கும் நிலையில் ,தற்போது அவருடைய நெருங்கிய நண்பனான பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு திடீரென மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Telugu actor Mohan Babu controversy

இவருக்கு வயது தற்போது 72 ஆகிறது.இவருக்கு 2 மகன்,ஒரு மகள் இருக்கின்றனர்.சமீபகாலமாக இவருடைய மகனான மனோஜ் மஞ்சுக்கும் நடிகர் மோகன் பாபுக்கும் சொத்து பிரச்னை ஏற்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க: என்ன வச்சு சம்பாதிக்குறாங்க : இந்த பொழப்புக்கு..? இறங்கி அடிக்கும் நயன்தாரா..!

மோகன் பாபு குடும்பப் பிரச்சனை

இவர் தன் மகன் மீது ஐதராபாத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில்,எனக்கும் என்னுடைய சொத்துக்கும் பாதுகாப்பு வேண்டும்னு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மனோஜ் மஞ்சு உள்பட சிலர் மோகன் பாபுவின் வீட்டுக்குள் நுழைய முயன்றதாக கூறப்பட்டது. இதையடுத்து பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர். அப்போது வீட்டை விட்டு வெளியே வந்த மோகன் பாபு பத்திரிகையாளரை தாக்கி ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.

இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழலில்,தற்போது உயர் ரத்த அழுத்தம் காரணமாக தெலுங்கு நடிகர் மோகன் பாபு இன்று மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!