படப்பிடிப்பில் திடீர் விபத்து…பிரபல குணச்சித்திர நடிகர் மருத்துவமனையில் மரணம்…!

Author: Selvan
21 January 2025, 9:19 pm

மாரடைப்பால் உயிரிழந்த விஜய ரங்கராஜு

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் ஏராளமள குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லன் ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் விஜய ரங்கராஜு.

சமீபத்தில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக,சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Telugu actor Vijay Rangaraju passes away

இவர் தமிழை விட தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனவர்,70 வயதாகும்,விஜய ரங்கராஜூவுக்கு சென்னையில் ஒரு வீடு உள்ளது,அங்கே தான் அவருடைய இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க: கனவெல்லாம் பலிக்குதே…காதலியை கரம்பிடித்த டிமான்டி காலணி பட இயக்குனர்…திரண்டு வந்த திரைப்பிரபலங்கள்…!

இவர் ஆரம்ப காலத்தில்,நாடக நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கி பின்பு வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்தார்.அதன் பிறகு நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த பைரவ தீபம் என்ற படத்தில் நடித்தது மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்,அதன் பிறகு பல குணச்சித்திர வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த நிலையில்,அவருடைய மரணம் தெலுங்கு சினிமாவை அதிர்ச்சியாக்கியுள்ளது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!