ஆக்ரோஷத்துடன் களமிறங்கப்போகும் விஜய்…. ஒரு மாதத்திற்குள் முக்கிய அறிவிப்பு!

Author: Rajesh
25 January 2024, 5:40 pm

சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.

Vijay - Updatenews360

அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதை வைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து மக்களுக்கு சமயத்திற்கு ஏற்ற நல உதவிகளையும் செய்து வருகிறார்.

விஜய் மும்முரமாக அரசியலில் இறங்கி வேலை செய்து வருவதை பார்த்து பல அரசியல் கட்சிகள் அலறியுள்ளது. காரணம் கோடானகோடி ரசிகர் பெருமக்களின் தலைவனான விஜய் தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் நம் தலை கூட எட்டிப்பார்க்காது என உண்மையறிந்து பயத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை சுமார் 200 நிர்வாகிகள் உடன் இன்று காலை சந்திப்பு மேற்கொண்ட விஜய் மக்கள் இயக்கத்தில் நிர்வாகிகள் உடன் முக்கிய விஷயம் குறித்து கலந்தாலோசித்தார். சுமார் 2 மணி நேர சந்திப்பிற்கு பிறகு GOAT படத்தின் படப்பிடிப்பிற்கு கிளம்பி சென்றுவிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சில மக்கள் இயக்க நிர்வாகிகள்,இந்த கூட்டத்தின் போது தளபதி விஜய்….

“எப்போதும் இல்லாத வகையில் அரசியல் கட்சி தொடங்குவது பற்றி ஆக்ரோஷமாக காணப்பட்டார். அதற்கான வேலைகள் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே இன்னும் ஒரு மாதத்தில் அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்பை விஜய் வெளியிடுவார்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!