உழைப்பு வறுமையை நீக்கும்… பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி – ரஜினிகாந்த்!

Author: Rajesh
13 December 2023, 9:38 pm

கர்நாடக மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து தமிழக மக்களின் மனங்களில் நிரந்தர இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் கடந்து வந்த பாதை மிக கடினமானது. திரைத்துறையில் ஜெயிக்க வேண்டும் என்றால் பளபளப்புடன் கூடிய தேஜசான உடல் தோற்றத்தோடு, வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிற ஃபார்முலாவையே மாற்றியவர் என்றால் அது ரஜினிகாந்த் தான். நேற்று அவர் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்த வயதிலும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சினிமாவில் டப் கொடுத்து வருகிறார். வசூல் நாயகனாகவும், ரஜினிகாந்த் டாப்பில் இருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கூட இந்த குதிரை அப்போதே நின்றுவிடும் இப்போது நன்றியுடன் என நினைத்தார்கள் ஆனால், 40 வருடத்தை தாண்டி ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

ரசிகர்களின் வாழ்த்தும் கடவுளின் அருளும் என்னை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது என ரஜினிகாந்த் சந்தோஷமாக கூறி வருகிறார். இந்நிலையில், டிசம்பர் 12ம் தேதி நேற்று ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி 73 வது பிறந்த நாளை ஒட்டி அவரது மனைவி, மகள்கள், பேரன்கள் என அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி கூறி பதிவிட்டுள்ள ரஜினிகாந்த்,“அனைத்து மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும், கலையுலகத்தை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும், அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அனைத்து துறை சார்ந்த என்னுடைய நலவிரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்… உழைப்பு:- “பொழுதைப் போக்கும்! வறுமையை நீக்கும்!! உடலினை காக்கும்” “உழைத்திடுவோம் மகிழ்ந்திடுவோம்” என குறிப்பிட்டிருக்கிறார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!