ரஜினிக்கு காதலியாக, மனைவியாக, தாயாக நடித்த பிரபல நடிகை : இன்னும் பெரிய லிஸ்டே இருக்கு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2023, 6:45 pm

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ராஜ்ஜியம் உருவாக்கியவர் நடிகர் ரஜினி. தனது ஸ்டைலால் ரசிகர்களை கவர்ந்த ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கி ரசித்து வருகின்றனர்.

ரஜினிக்கு தொட்டதெல்லாம் ஹிட் படங்களாக அமைந்தது. இதனால் அவருடன் நடிக்க ஏராளமான நடிகர்கள், நடிகைகள் போட்டா போட்டி போட்ட காலமும் உண்டு.

அவருடன் ஒரு படத்தில் ஆவது ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காதா என எத்தனையோ பேர் ஏங்கியுள்ளனர். அப்படி சினிமாவில் ரஜினிக்கு தோழியாக, காதலியாக, மனைவியாக, தாயாக நடித்த நடிகை என்ற பெயருக்கு சொந்தக்காரர் நடிகை லட்சுமி தான்.

பொல்லாதவன் படத்தில் ரஜினியின் மகளை பாதுகாக்கும் பெண்ணாக லட்சுமி நடித்திருப்பார், அந்த படத்தில் ரஜினியின் நல்ல எண்ணங்களை பார்த்து காதலில் விழுகிறாள்.

அதே போல நெற்றிக்கண் படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த ரஜினியில் தந்தை ரஜினிக்கு மனைவியாக நடித்திருப்பார். பின்னர் ரஜினியின் 100வது படமான ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருப்பார். பின்னர் படையப்பா படத்தில் ரஜினிக்கு தாயாக நடித்திருப்பார்.

இதே போல நடிகை ஜெயபாரதி, அலாவுதினும் அற்புத விளக்கும் படத்தில் ராணியாக நடித்திருப்பார். அந்த ராணியை காப்பாற்றும் வீரராக ரஜினி நடித்திருப்பார். அதே ஜெயபாரதி தான் முத்து படத்தில் ரஜினிக்கு தாயாக நடித்திருப்பார்.

மற்றொரு நடிகை மீனா. இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகத்தான் இருக்கும். குறிப்பாக எங்கேயோ கேட்ட குரல் படத்தில் ரஜினி அம்பிகாவுக்கு மகளாக நடித்திருந்த மீனா, பின்னர் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ஆதரவற்ற குழந்தையாக நடித்திருப்பார்.

பின்னர் எஜமான், வீரா, முத்து, குசேலன், அண்ணாத்த போன்ற படங்களில் ரஜினியுடன் நடத்திருந்தார்.

இந்த பட்டியலில் உள்ள மற்றொருவர் ஸ்ரீவித்யா.

இவர் ஆறுபுஷ்பங்கள் படத்தில் ரஜினியுடன் நடித்திருப்பார், தொடர்ந்து அபூர்வ ராகங்கள், உழைப்பாளி, மனிதன், தளபதி, மாப்பிள்ளை என ரஜினிக்கு மாமியாராக, அண்ணியாக, தாயாக நடித்திருப்பார்.

  • the reason behind rj balaji changed his name as rjb அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?