அவருக்கு பதில் இவர்… ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமான நடிகர் தேர்வு!

Author: Shree
9 September 2023, 1:37 pm
vela rama moorthy
Quick Share

பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீப நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) ‘எதிர்நீச்சல்’ தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பல படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

அடுத்ததாக கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சீரியல் ஒன்றிக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தானாகவே காரை ஓட்டிச்சென்று வடபழனி சூர்யா மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு பாரம்பரிய முறைப்படி உறவினர்கள் முன்னைலையில் உடல் தகனம் செய்ய உள்ளனர்.

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து TRP’யில் முதல் இடத்திலும் சமூகவலைகளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வந்த மாரிமுத்து இறந்துவிட்டதால் அடுத்த ஆதி குணசேகரன் யார் என்பது குறித்த சமீபத்திய தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதன் படி அடுத்த குணசேகரனாக பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்க போகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட அவர் இந்த ரோலுக்கு பொருத்தமாக இருப்பார் என்பது பெருவாரியான மக்கள் கருத்தாக இருக்கிறது.

Views: - 463

2

0