3 வரியில் CAA குறித்து விஜய் வெளியிட்ட அறிக்கை.. ‘நீங்க ஒன்னும் சாதிக்கப்போறது இல்ல’… கழுவி ஊற்றும் பிரபல தயாரிப்பாளர்..!
Author: Vignesh12 March 2024, 3:11 pm
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, சமீபத்தில் தான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர செயலி ஒன்றை அறிமுகம் செய்திருந்த நிலையில், 3 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் அந்த கட்சியில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய் சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் தொடர்ந்து தனது குரலை எழுப்பி வருகிறார். அந்த வகையில், தற்போது சிஏஏ சட்டத்திற்கு எதிராக சட்டத்திற்கு எதிராக தனது குரலை எழுப்பியுள்ளார். அதில், “சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்”. என அறிக்கை ஒன்றை த.வெ.க கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.
3 வரியில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டது கூட ஒரு விதத்தில் ஓகே என்று சொல்லலாம். ஆனால், இந்த அறிக்கையில் எந்த அரசு சட்டத்தை கொண்டு வந்தது. யார் கொண்டு வந்தார்கள் என்று கூட இல்லை, ஏன் கண்டனம் என்ற வார்த்தை கூட இல்லாமல் கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பது நெட்டிசன்களிடையே, கேலிக்கு உண்டாகியுள்ளது. முக்கியமாக, இந்த சட்டத்தை கொண்டு வந்தது மத்திய அரசு, விஜய் ஒரு வார்த்தை கூட மத்திய அரசை எதிர்க்கவில்லை. மாறாக இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று மாநில அரசுக்கு விஜய் கோரிக்கை விடுத்துள்ளது தற்போது விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், இந்த சட்டத்திற்கு எதிராக திமுகவினர் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து விட்டனர். அதேபோலத்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த சட்டத்தை தொடர்ந்து எதிர்த்தும் வருகிறார். தமிழ்நாட்டில், இதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வருகிறார். அப்படி இருக்கையில், மத்திய அரசை விமர்சிக்காமல் மாநில அரசை விஜய் விமர்சனம் செய்வது ஏன் என்ற கேள்வியும் பலரிடையே எழுந்துள்ளது. விஜய் இன்னும் தீவிரமாக ஆராய்ந்து அறிக்கையை வெளியிட்டு இருக்கலாம் என்ற அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதைப் பற்றி படித்துவிட்டு பேசியிருக்கலாம் பொத்தம் பொதுவாக இப்படி அறிக்கை வெளியிடுவது சரியா என்று நெட்டிசன்கள் விஜயை விமர்சித்தும் வருகின்றன.
இந்நிலையில், மார்க் ஆண்டனி பட தயாரிப்பாளரான வினோத்குமார் விஜயின் அறிக்கையை குறித்து விமர்சித்துள்ளார். அதில், ஒரு நடிகனாக மட்டுமே அவர் மீது காதல் உள்ளது என்றும், அவருக்கு அரசியல் ஆதரவு இல்லை. அவருடைய அரசியல் பயணம் குறித்து எனக்கு கவலையாக உள்ளது. புஸ்ஸி ஆனந்த் போன்றவர்கள் அவருடன் இருந்து எதுவும் சாதிக்க போறது இல்லை என்று வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார். இந்த எக்ஸ் தள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Here after Love towards him only as an actor ! No support politically. Also, now I have concern about his political journey Bussy Anand pondravargal avarudan irundu edhuvum sadhikka poradhillai. pic.twitter.com/C2xi6hzWj6
— Vinod Kumar (@vinod_offl) March 12, 2024