எல்லாத்துக்குமே தனுஷ் தான் காரணம்.. மனம் திறந்து பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!
Author: Vignesh12 March 2024, 5:29 pm
கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.
தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தவர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இவர்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா பயணம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
இதில், அனிருத் குறித்த கேள்வி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடம் கேட்கப்பட்டது. நீங்கள் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் அனிருத். இந்தியாவில் புகழின் உச்சத்தில் இருக்கிறார் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அனிருதை தனுஷ் தான் அறிமுகப்படுத்தினார். இதற்கு தனுஷ் தான் காரணம், நான் எந்த விதத்திலும் அதற்கு காரணம் இல்லை. அனிருத்திடம் இருக்கும் திறமையை தனுஷ் தான் கண்டுபிடித்தார். பெற்றோர்கள் அவரை படிக்க வெளிநாட்டிற்கு அனுப்ப நினைத்தபோது அவர்களிடம் பேசி மனமாற்றினார்.
அதன் பின்பு மூன்று படத்தில் அவருக்கு இசையமைப்பாளராக போடவேண்டும் என எண்ணிடம் கூறினார். இன்று அனிருத்தின் வளர்ச்சியை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், இசையமைப்பாளர் அனிருத் தான் ஏறும் பல மேடைகளில் தனுஷ் தனக்கு கொடுத்த வாய்ப்பைப் பற்றி பேசினார். அந்த D இல்லனா இந்த A இல்லை என்று மாஸாகவும் கூறியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
0
0