பாபநாசம் படத்தில் ரஜினிகாந்த்? இயக்குனர் எடுத்த முடிவால் ஹீரோவே மாறிய சம்பவம்!

Author: Prasad
4 July 2025, 4:20 pm

திரிஷ்யம் படத்தின் ரீமேக்

2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம் “திரிஷ்யம்”. விறுவிறுப்பான மிகவும் வித்தியாசமான கிரைம் திரில்லர் திரைப்படமாக மிகப்பெரும் வெற்றியை பெற்ற இத்திரைப்படம் 2015 ஆம் ஆண்டு “பாபநாசம்” என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. “திரிஷ்யம்” திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசஃபே இத்திரைப்படத்தையும் இயக்கினார். 

the reason behind rajinikanth not acted in papanasam movie

இதில் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ் உட்பட பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சுயம்புலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். “திரிஷ்யம்” படத்தை போலவே இத்திரைப்படமும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் இருந்தது. 

இந்த நிலையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் ஜீத்து ஜோசஃப், “பாபநாசம்” திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்தது குறித்தான ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

இயக்குனர் எடுத்த முடிவு

அதாவது “பாபநாசம்” திரைப்படத்தில் முதலில் ரஜினிகாந்துதான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் படத்தில் போலீஸ் ரஜினிகாந்தை அடிப்பது போன்ற காட்சிகள் ரஜினியின் ரசிகர்களுக்கு பிடிக்காது என நினைத்தாராம் ஜீத்து ஜோசஃப். இதனிடையே கமல்ஹாசன் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இதை அறிந்த ரஜினிகாந்த் இயக்குனரை வாழ்த்தி அனுப்பினாராம். இவ்வாறுதான் “பாபநாசம்” திரைப்படம் கமல்ஹாசன் கைக்கு போனது என ஜீத்து ஜோசஃப் கூறியுள்ளார்.

the reason behind rajinikanth not acted in papanasam movie

“திரிஷ்யம்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து “திரிஷ்யம் 2” திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து “திரிஷ்யம் 3” திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. 

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!
  • Leave a Reply