இதுவரை அஜித் கூட நடிக்காததற்கு காரணம் இது தான் – காமெடி நடிகர் சதீஷ் பளீச்!

Author: Rajesh
17 February 2024, 12:17 pm

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் காமெடி நடிகராக பெரும் புகழ் பெற்றவர் நடிகர் சதிஷ். ஹீரோக்களுக்கு நண்பனாக பெரும்பாலான படங்களில் நடித்து புகழ் பெற்ற சதிஷ் கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த தமிழ் படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து மதராசபட்டினம், வாகை சூட வா, மெரினா, எதிர்நீச்சல், மான் கராத்தே, கத்தி, தங்க மகன், ரெமோ , பைரவா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், விஷால்,சிவகார்த்திகேயன், ஆர்யா உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ள சதிஷ் இதுவரை அஜித்தின் படத்தில் மட்டும் நடித்ததில்லை இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்டதற்கு. எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? கண்டிப்பாக அவருடன் நடிக்க வேண்டும் என்று விருப்பம் உள்ளது.

அப்படியொரு முறை அத்துடன் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியாமல் போனது. ஆனால், அதன் பின் அந்த ரோலில் என்னுடைய நண்பன் தான் நடித்திருந்தான். அதன் பின்னர் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்புகளே எனக்கு கிடைக்கவில்லை. இது தான் நான் அவருடன் நடிக்காததற்கான உண்மையான காரணம் என வெளிப்படையாக பேசினார் காமெடி நடிகர் சதீஷ்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!