பொண்ணு மாப்பிள்ளை ஜோரு… தடபுடலா ஆரம்பித்த அருண் விஜய் வீட்டு கல்யாணம்!

Author: Rajesh
17 February 2024, 11:40 am
diya vijayakumar
Quick Share

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமார் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்து இவர் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக மிகவும் கௌரமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார். முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட இவர் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய் ஆவார், இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, ஸ்ரீ தேவி என்ற பெண்கள் உள்ளனர். இதில் விஜயகுமாரின் மூத்த மகன் அனிதா விஜயகுமாரின் மகளான தியாவுக்கு அண்மையில் திருமணம் நிச்சயம் செய்தனர். இந்த திருமணம் வேலையை குடும்பத்தினர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக செய்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் , தனுஷ் உள்ளிட்ட பிரபலங்களுக்கு பத்திரிக்கை வைத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் இந்த திருமண கொண்டாட்டம் துவங்கியுள்ளது அதன் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

Views: - 205

0

0