கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு சர்ப்பிரைஸ் கொடுத்த பிரபல நடிகை.. நெகிழ்ச்சியில் மாற்றுத்திறனாளியின் குடும்பம்..!

Author: Vignesh
22 December 2023, 1:12 pm

பொதுவாக கிறிஸ்மஸ் பண்டிகை என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது பிரியாணி மற்றும் சாக்லேட் கிறிஸ்துமஸ் தாத்தா தான். இந்த தாத்தா நமக்கு பரிசு தருவர் என நம்பும் குழந்தைகள் பலர் உள்ளனர். அப்படி, தற்போது ஒரு மாற்றுத்திறனாளி குழந்தைக்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறியுள்ளார் பிரபல நடிகை.

அது வேறு யாருமில்லை நடிகை ரோஜாதான் செருப்பு தைக்கும் தொழிலாளி ஆன நாகராஜுக்கு மேரி என்கிற மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேரிக்கு சமீபத்தில் சிறுநீரகம் செயல் இழந்து தற்போது, உடல்நிலை முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார்.

roja - updatenews360

இரண்டு சின்னஞ்சிறு பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவர்களை படிக்க வைக்க முடியாமலும் மருத்துவ செலவுக்கு நாகராஜ் மிகவும் கஷ்டப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இவரது வீட்டிற்கு கிறிஸ்மஸ் தாத்தாவாக சென்று கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடியுள்ளார் நடிகை ரோஜா.

ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் உள்ள பாம்பே காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ். மாற்றுத்திறனாளியான இவர் சாலைகளில் காலணிகளை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்த நாளை யொட்டி அமைச்சர் ரோஜா நாகராஜுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

roja - updatenews360

கிறிஸ்மஸ் தாத்தாவைப் போன்று வேடமிட்டு அவரது வீட்டிற்கு சென்று குழந்தைகளுக்கு பரிசுகள் அளித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தொடர்ந்து அவரது மனைவிக்கும் ஆறுதல் கூறிய அமைச்சர் ரோஜா பரிசுகளை வழங்கியதோடு தொழிலில் மேம்படுத்துவதற்கு இரண்டு லட்சம் நீதியும் அழைத்துள்ளார். இதில், தனது தந்தையின் பெயர் கொண்ட ஒருவருக்கு உதவி செய்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  • Idlikkadai vs Good Bad Ugly box office clash அஜித் படத்திற்கு வழிவிட்ட தனுஷ்…ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு..!