ரம்பாவை தாக்கிய லைலா… அதிர்ச்சி காரணத்தை லீக் செய்த பிரபலம்..!
Author: Vignesh22 December 2023, 12:01 pm
ஒரு சில வருடங்களுக்கு முன்பு நடிகை ரம்பா நடிகை லைலா டிரெயினில் போய்க்கொண்டிருக்கும் போது அடித்ததாக செய்தி வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, இது குறித்து லைலா தான் எதற்காக அப்படி நடந்து கொண்டேன் என்பது தெரியவில்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால், அது பற்றி இப்போது பிரபலம் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
விமர்சகர் செய்யாறு பாலு ரம்பா மற்றும் லைலா இருவரும் சண்டையிட்ட காரணம் இதுதான் என சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு தான் அதிக சண்டை நடைபெறும் என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால், உண்மையிலேயே சில நடிகைகளுக்குள் தான் ஒருவருக்கொருவர் ஈகோ வைத்துக்கொண்டு மனதுக்குள்ளையே போட்டி பொறாமையோடு இருந்திருக்கிறார்கள்.
அது சில நேரங்களில் வெளிப்படையாக வெடிக்கவும் செய்திருக்கிறது. அந்த வகையில், நடிகை ரம்பா மற்றும் லைலாவின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.
ஆரம்ப காலகட்டத்தில் நடிகை ரம்பா கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்தார். தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமா எடுக்க வேண்டும் என்று ரம்பா முடிவில் இருந்தார். அப்போது, அந்த நேரத்தில் ரம்பாவுக்கு சில தயாரிப்பாளர்கள் கூட இந்த முடிவு வேண்டாம் இது சரி வராது என அறிவையும் கூறி இருந்தார்கள். ஆனால், யார் சொல்லியும் கேட்காத ரம்பா 3 ரோசஸ் என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.
அந்த படத்தில் ஜோதிகா, லைலா, ரம்பா ஆகியோர் நடித்திருந்தனர். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை படம் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பும் கிடைக்கவில்லை. இந்த படத்திற்கு நடிகைகள் மூவரும் ஒரு முறை ட்ரெயினில் சென்று கொண்டிருந்தபோது ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
அதாவது, தாங்கள் சொல்ல வேண்டிய தூரம் ரொம்ப தூரம் என்று நடிகைகள் லைலாவும் ரம்பாவும் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது, ஒரு கட்டத்தில் லைலா திடீரென ரம்பாவை அடிக்க தொடங்கிவிட்டாராம். அப்போது, ரம்பா நிறுத்து நிறுத்து என கத்தியும் கேட்காமல் லைலா அடித்து விட்டார். பிறகு, இருவரையும் அங்கிருந்தவர்கள் விளக்கி சமரசம் செய்துள்ளனர்.
இது குறித்து, கேட்டபோது எனக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை என்று அந்த நேரத்தில் லைலா சமாளித்து இருந்தார். இது பற்றி தற்போது, செய்யாறு பாலு ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். விஐபி படத்தில் முதலில் ரம்பா கேரட்டரில் நடிக்க இருந்தது லைலாதானம். ஆனால், எதுவாயிருந்தாலும் சரி தயாரிப்பாளர் என்னை வந்து பார்க்க வேண்டும் என்று லைலா கூறி இருந்தாராம். ஆனால், இந்த விஷயத்தை ரம்பா தனக்கு சாதகமாக்கி அந்த வாய்ப்பை கைப்பற்றி விட்டதாக சிலர் லைலாவிடம் போட்டுக் கொடுத்திருக்கின்றனர். அதனால், தான் லைலா ட்ரெயினில் ரம்பாவிடம் அப்படி நடந்து கொண்டார் என்று செய்யாறு பாலு தற்போது பத்தவைத்துள்ளார்.