எந்திரனுக்கு முன்னாடியே வெளிவந்த ரோபோ படம்? கூலி பட நடிகர் இப்படி ஒரு படம் எடுத்துருக்காரா?
Author: Prasad19 August 2025, 11:30 am
ஹாலிவுட்டுக்கே சவால் விட்ட திரைப்படம்
2010 ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த “எந்திரன்” திரைப்படம் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் அளவிற்கான ரோபோ சம்பந்தப்பட்ட சைன்ஸ் ஃபிக்சனாக அமைந்திருந்தது. இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் பார்வையாளர்களை படுபயங்கரமாக மிரள வைத்தது என்றே சொல்லலாம். பிரம்மாண்டத்தின் உச்சம் என்பது இதுதான் என பலரும் வியந்து பாராட்டினார்கள்.

இந்த நிலையில் பிரபல கன்னட இயக்குனரும் நடிகருமான உபேந்திரா “எந்திரன்” திரைப்படம் வெளியாவதற்கு 8 வருடங்களுக்கு முன்பே ரோபோ கதையம்சத்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
அப்போவே அப்படி!
கன்னடத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த “ஷ்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கியவர்தான் உபேந்திரா. இவர் இயக்கிய திரைப்படங்கள் மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்டவை. இவர் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த நிலையில்தான் ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தில் உபேந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
உபேந்திரா 2002 ஆம் ஆண்டு “ஹாலிவுட்” என்ற ஒரு சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் கதாநாயகன் ஒரு ரோபோவை கண்டுபிடிப்பார். அந்த ரோபோவை கொண்டு ஒரு பெண்ணை கவர திட்டமிடுவார். இறுதியில் அந்த ரோபோ அந்த பெண்ணை காதலித்துவிடும். இதுதான் இப்படத்தின் கதை.

கிட்டத்தட்ட இதே கதையம்சத்தோடுதான் “எந்திரன்” திரைப்படமும் உருவாகியிருந்தது. எனினும் “எந்திரன்” திரைப்படம் வெளியாவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே உபேந்திரா “ஹாலிவுட்” என்ற சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
