அசிங்கமா இருக்கு…. அட்ஜெஸ்ட் பண்றதை கூட Zoom பண்றாங்க – வாணி போஜன் வேதனை!

Author: Shree
23 March 2023, 10:13 am
vaani dp
Quick Share

சீரியல் நடிகையாக மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். இவர் ஏற்கனவே கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். இதில் தெய்வமகள் சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

அதன் பின்னர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் வாணி போஜன் நடிகர் ஜெய் உடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாக அவ்வப்போது கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால், அப்டி எதுவும் இல்லை என வாணி போஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும், என்னை குறித்து தவறான செய்திகள் பல உலா வந்துக்கொண்டிருக்கிறது. அதில் எந்த உண்மையும் இல்லை.

அப்படி வரும் வதந்தி செய்திகள் என்னை மிகவும் வேதனை படுத்துகிறது. நான் சில சமயங்களில் சேலையை அட்ஜஸ்ட் செய்வதை கூட ஜூம் பண்ணி எடுப்பார்கள். அது மிகவு ம் சங்கடமாக இருக்கிறது என்றார்.

Views: - 615

9

7