தாறுமாறான வசூல் சாதனை படைக்கும் வலிமை.. வெறித்தனம் காட்டும் அஜித் ரசிகர்கள்..!

Author: Rajesh
23 February 2022, 10:44 am
Quick Share

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெளியாகிறது. அனைத்து டிக்கெட்டுகளும் ரிலீஸ் தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே விற்பனை ஆகி, தற்சமயம் ஹவுஸ்ஃபுல். இதுவே மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தள்ளிப்போன, இந்த படம் கடத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால், அப்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதே போல, பொங்கலுக்கும் எதிர்பார்த்து ஏமாந்து போயினர். திரையரங்குகளில் 100சதவீதம் பார்வையாளர்களுடன் காட்சிகள் திரையிடப்படும் என்று அறிவிப்பு வரும் போது தான் வலிமை திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.

பிரான்ஸ் நாட்டில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம், மிகப்பெரிய வெற்றிப்படமாகி, கணிசமான வசூலைப் பெற்றது. இந்த நிலையில், தற்போது வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. இதனிடையே மாஸ்டர் திரைப்படத்தின் மொத்த வசூலையும் முன்பதிவிலேயே வலிமை தாண்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஜித் மற்றும் வினோத் காம்பினேஷனில் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள வலிமை, ரிலீசுக்கு முன்பே பல சாதனைகளை முறியடித்து வருகிறது. இந்த நிலையில் வெளியான பிறகு பல சாதனைகளை படைக்கும் என்பதால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Views: - 456

2

0