இந்த வாட்டி மிஸ்சே ஆகாது.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை உறுதி செய்த போனி கபூர்..

Author: Rajesh
2 February 2022, 11:27 am

கொரோனா பரவல் காரணமாக பொங்கலையொட்டி கடந்த ஜனவரி 13 ஆம் தேதி வெளியாவதாக இருந்த ‘வலிமை’ படத்தினை, தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் தள்ளி வைத்தது படக்குழு. இதனிடையே தமிழகத்தில் ஊரடங்கு விதிகளையும் கொரோனா விதிமுறை கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளதால், இதனால் பல ஹீரோக்கள் படங்களை வெளியிட, தயாரிப்பாளர்கள் தயாராகி கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், தள்ளிப்போடப்பட்டிருந்த நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம், பிப்ரவரி 24 ம் தேதி உலகளவில் திரையரங்கில் வெளியாகயிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இதுகுறித்த தன் பதிவில் போனி கபூர் ‘ படத்துக்கான காத்திருப்பு இப்போது, நிஜமாகவே முடிவுக்கு வந்துவிட்டது. வலிமையின் அனுபவத்தை, பிப்ரவரி 24ம் தேதி உலகளவில் திரையங்குகளில் பெறுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!