அந்த மைனர் குஞ்சு ஒரு நடிகையை கூட விட்டு வைக்கமாட்டான் – உண்மையை உடைத்த வாணி போஜன்!

Author: Shree
25 March 2023, 12:00 pm
vani bojan
Quick Share

சீரியல் நடிகையாக மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். இவர் ஏற்கனவே கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். இதில் தெய்வமகள் சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

அதன் பின்னர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். அந்த படத்திற்கு பின்னர் இருவரும் நெருங்கிய நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வாணி போஜனிடம் இயக்குனர் மகள் ஒருவரை திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வெளியானதே அது யார் என்று உங்களுக்கு தெரியுமா? என கேட்டதற்கு, உடனே சிரித்துக்கொண்டே வாணி போஜன், அசோக், ஒரு நடிகையை கூட விட்டு வைக்கமாட்டான். பல பெண்களோடு டேட் செய்கிறான் இப்போ நான் எந்த பொண்ண சொல்றது என நக்கலடித்தார்.

பின்னர், சாரி… எனக்கு அந்த கிசுகிசு தெரியாது. அசோக் ரொம்ப நல்லவன் மேலும், எல்லோரிடமும் நட்பாக பழக்கக்கூடியவர். அவரை நம்பி வரும் பெண்ணை நிச்சயம் நன்றாக பார்த்துக்கொள்வார் என்று கூறினார். இந்த செய்தி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 288

1

3