“32 ஆண்டுகள் தீராத சாதனை… ஆறாத ரணங்கள்” – வெறித்தனமா வெளிவந்த “விடாமுயற்சி” POSTER!

Author:
3 August 2024, 1:03 pm
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் தற்போது “விடாமுயற்சி” மற்றும் “குட் பேட் அக்லி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் அதற்கான வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அஜித் இன்றுடன் சினிமா திரைத்துறைக்கு வந்து 32 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

எந்தவிதமான பின்பலம் இன்னும் இல்லாமல் முழுக்க முழுக்க தனது சொந்த உழைப்பாலும் தனது திறமையாலும் முன்னேறி இன்று நட்சத்திர அந்தஸ்தை தொட்டு இருக்கிறார் நடிகர் அஜித். இவர் கடந்து வந்த பாதைகளில் பல அவமானங்கள், தோல்விகள், ஆபத்தான விபத்துக்கள் உள்ளிட்டவற்றைக் கடந்து தான் இன்று இந்த இடத்தை தொட்டு இருக்கிறார்.

vidamuyarchi

1993 ஆம் ஆண்டு அமராவதி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான அஜித் ஆரம்பத்திலேயே பெரும் அவமானங்களையும் தோல்விகளையும் சந்தித்தார். அதன் பிறகு ஆசை திரைப்படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. பின்னர் காதல் கோட்டை திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகராக பார்க்கப் பட்டார் .

அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து பெருவாரியான ரசிகர்களை தனக்கு சொந்தம் ஆக்கிக் கொண்டார். தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்த அவள் வருவாளா ,உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வாலி, சிட்டிசன், வில்லன், பில்லா, மங்காத்தா ,விஸ்வாசம் போன்ற திரைப்படங்கள் மெகா ஹிட் அடித்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தது .

இந்த திரைப்படங்கள் அஜித்தின் கெரியரிலே மிக முக்கிய படங்களாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அஜித் திரைக்கு வந்து 32 ஆண்டுகள் ஆவதை விடாமுயற்சி பட குழு பாராட்டும் விதத்தில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த போஸ்டரில் “32 ஆண்டுகள் தீராத சாதனைகளும்… ஆறாத ரணங்களும்…. யாவையும் எதிர்கொண்டு வெல்லும் “விடாமுயற்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் அஜித் ரத்த காயங்களுடன் வெறித்தனமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஆக்ரோஷமான முக தோற்றத்துடன் இருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாக பலரும் அஜித்தின் இத்தனை வருட சினிமா பயணத்திற்கும் , அவரின் சாதனைகளுக்கும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

  • Instagram ஓட்டலில் அறை எடுத்து 20 நாட்களாக சிறுமியை சீரழித்த இளைஞர் : இன்ஸ்டாகிராம் நண்பனால் வந்த வினை!!
  • Views: - 141

    0

    0